செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 டிசம்பர் 2018 (15:27 IST)

ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் சில்மிஷம்

நாக்பூரில் மாணவன் ஒருவன் செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு 7 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் கையில் செல்போன்கள் இல்லத மனிதர்களை பார்க்கவே முடியாது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் செல்போன் கேமிற்கு அடிமையாகி எந்நேரமும் போனும் கையுமாக இருப்பர். சிலர் கேமை தாண்டி இணையத்தில் ஆபாச படங்களை பார்த்த்து சீரழிகின்றனர்.
 
அப்படி நாக்பூரை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோரிடம் கேம் விளையாடுவதாக கூறி அவர்களிடமிருந்து செல்போனை வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த பையன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளான்.
 
இதனையடுத்து அவன் அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அலண்டுபோன அந்த சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் அந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.