ரூ.20,300 கோடி கடன்: திவாலான பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்
சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி திவாலாகதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சரிவை சந்திக்க துவங்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை ரூ.20,300 கோடியாக கடன் அதிகரித்தது.
இதனால், அந்நிறுவனத்தின் தலைவர் சார்பில் கடல் பிரச்சனையால் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாராணை முடிந்து தற்போது ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜியோனி திவாலானதற்கு அந்நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்துதே காரணம் என கூறப்படுகிறது.