25 புல்லட் ரயில்களை நிறுத்திய ’நத்தை’: ஜப்பானில் நடந்த அதிசயம்
ஜப்பானில் மின்சார கோளாறால், 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு, ஒரு நத்தை தான் கராணம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 30-ல் ஜப்பான் நாடு முழுவதும் மின்சார கோளாறு காரணமான, முக்கியமான 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நிலநடுக்கம், பூகம்பம், கனமழை என எந்த இயற்கை பேரிடர்கள் வந்தாலும் ஜப்பானில் ரயில் சேவைகள் நிற்காமல், தாமதம் ஆகாமல் செயல்படும்.
ஆனால் கடந்த மே 30 அன்று ஜப்பானில் மின்சார கோளாறு காரணமாக ஜப்பான் 25 புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் 12,000 பேர் பாதிப்புக்குள்ளாகினர்.
இதற்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்திய ஜப்பான் ரயில்வே ஊழியர்கள், இறுதியில் இதற்கு காராணம் ஒரு நத்தை என்று கண்டுபிடித்தனர்.
ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்றை ரயில்வே துறையினர் மீட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை நத்தை கடக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனால் ஷார்ட் சர்க்யூட் ஆனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் மின் கோளாறு ஏற்பட்டு, 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தகவலை அறிந்த ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாகினர்.
எந்த ஒரு இயற்கை பேரிடராலும் நிறுத்த முடியாத புல்லட் ரயில்களை ஒரு நத்தை நிப்பாட்டியது உலகம் முழுவதும் வியப்பாக பார்க்கப்படுகிறது.