திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: கோத்தபய அரசு தப்பிக்குமா?

kothapaya
இன்றைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர இருக்கும் நிலையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்து கோத்தபய அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர் 
 
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அதிபராக இருக்கும் கோத்தபாய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோத்தபய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கோத்தபய பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது