1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (21:58 IST)

'டிண்டர்' ஆப்-ல் பெண்ணுடன் டேட்டிங் செய்து ரூ.14 கோடியை இழந்த நபர்!

tinder
'டிண்டர்' ஆப் என்ற சமூக வலைதளம் மூலம்   பெண்ணுடன் பழகிய ஒரு நபர் ரூ.14 கோடி இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்று அதில் நேரத்தைச் செலவிடும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம், டிண்டர், ஆகிய சமூக வலைதளங்கள் இருக்கும் நிலையில், இதன் மூலம் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் டேட்டிங் ஆப்பில் சுமார் ரூ.14 கோடியை இழந்துள்ளார்.

டிண்டர் சமூக வலைதளத்தில், ஒரு பெண்ணிடம் அறிமுகமான நிதி ஆலோசகர் ஒருவர், இந்திய மதிப்பில் ரூ.14 கோடியை இழந்துள்ளதாக சீன நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.