புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (08:30 IST)

திருமணமான ஐந்தே நிமிடங்களில் புதுமண தம்பதிகள் பலி! அமெரிக்காவில் சோகம்

திருமணமான ஐந்தே நிமிடங்களில் விபத்து ஒன்றில் புதுமண தம்பதிகள் பலியான சோக நிகழ்ச்சி அமெரிக்காவில் டெக்ஸால் பகுதியில் நடந்துள்ளது
 
அமெரிக்காவில் உள்ள டெக்ஸால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் என்பவர் தனது தோழி பவுட்ரியாக்ஸ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் முறைப்படி செய்து கொண்டனர். திருமண பதிவு அலுவலகத்தில் இருவரும் பதிவு செய்து கையெழுத்திட்டு வெளியே வந்த புதுமண தம்பதிகள் வீட்டிற்கு செல்ல தங்கள் காரில் ஏறினர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் புதுமண தம்பதிகள் இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
 
குடும்பத்தினர் கண்ணெதிரே நடந்த இந்த கோர விபத்தால் புதுமண தம்பதிகளின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனது மகனுக்கு வாழ்த்து சொல்ல வந்த நான் அவர் இறப்பதை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்துவிட்டதே என கதறி அழுத ஹார்லி மோகனின் தாய், அவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட கனவு இருந்ததாகவும், அந்த கனவு ஒரே ஒரு விபத்தில் சிதைந்துவிட்டதாகவும் கண்ணீருடன் கூறினார்
 
திருமணமான ஐந்தே நிமிடங்களில் புதுமண தம்பதி மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து டெக்ஸால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.