பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து..

Last Updated: சனி, 24 ஆகஸ்ட் 2019 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள வீட்டில், இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டின் முன்பகுதியில் கரும்புகை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். வீட்டிற்குள் இருந்த ஸ்ரீசாந்தும் அவரது மனைவி, குழந்தைகளும் எந்த காயமுன்றி உயிர் தப்பினர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :