தமிழக இளைஞரை திருமணம் செய்த ஜப்பானிய பெண் ! வைரல் தகவல்

kumbakonam
Last Modified ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (15:33 IST)
கும்பகோணத்தை சேர்ந்த இளைஞர் ஒரு இளைஞருக்கும், ஜப்பானிய பெண்ணுக்கும் தமிழக கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது. 
கும்பகோணத்தில் உள்ள மோதிலால் தெருவை சேர்ந்தவர் வசந்தன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்துவிட்டு அங்கு வேலை செய்துவந்தார்.
 
அப்போது, முகநூல் வழியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற பெண் அறிமுகமானார். அதன் பின்னர் அவர்களின் நட்பு காதலாக அரும்பியுள்ளது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பின்னர் இருவீட்டாரின் பூரண சம்மதத்தில் தமிழ் பாரம்பரியத்துடன் இன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் மேகுமியின் பெற்றோர் வரமுடியாத சூழ்நிலையில் அவரது மாமா கலியாணத்தை நடத்திவைத்து பெற்றோரின் ஸ்தானத்தில் சடங்குகள் நடத்தினார்.
 
இத்திருமணத்தில் மணமகளின் தங்கை, நண்பர்கள் உள்பட பலர் தமிழ் கலாச்சாரப்படி வேடி புடவைகள் அணிந்து திருமணத்துக்கு வந்த மக்கள், உறவினர்களை வரவேற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. ஜப்பானிய பாரம்பரியத்தில் வளர்ந்து நம் தமிழக கலாச்சாராத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டத்தை மக்கள் எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :