பூசலார் நாயனார் குருபூஜை விழாவினையொட்டி திருவீதி உலா

Poojalar Nayanar
anandakumar| Last Modified வியாழன், 31 அக்டோபர் 2019 (22:23 IST)
63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் குருபூஜை விழாவினையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு அலங்காரவள்ளி, அருள்மிகு செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் குருபூஜையையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பூசலார் நாயனாரை கோயிலின் உட்பிரகாரத்தில் பக்தர்கள் கொண்டு வந்து பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

வழிநெடுகிலும் சிவனடியார்களின் மேள தாளங்கள் இசைக்க, பூசலார் நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நாயன்மாரின் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கட்டளைதாரர்களும், சிவனடியார்களும் கோயில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் மேலும் படிக்கவும் :