திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (16:22 IST)

டான்ஸ் ஆட மறுத்த மனைவி: மொட்டையடித்த கணவன்!!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மொட்டையடித்து சிதரவர்கை செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்தவர் மியான் பைசல். இவரது மனைவி  அஸ்மா ஆஸிஸ். சமீபத்தில் அஸ்மா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
 
மொட்டை தலையுடன், முகத்தில் காயங்களுடன் இருந்த அவர் பேசுகையில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், நண்பர்களின் முன்னிலையில் தன்னை ஆடையை அவிழ்த்து நடமாட சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். மேலும் தலை முடியை ஷேவ் செய்து டார்ச்சர் செய்வதாகவும் கூறியிருந்தார்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என  கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகவே பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அஸ்மாவின் கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.