20 வயது காதல் மனைவியை கொலை செய்த கணவன்: என்ன காரணம்?
சென்னை கே.கே. நகரில் காதல் மனைவியை திருமணமான 3 மாதத்தில் கநத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (24) எலக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார்
இவர் சந்தியா (20) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன் அவரது தாய் சரிதா தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் அருண்குமார்-சந்தியா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் கத்தியால் சந்தியா தொண்டையில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா சுருண்டு விழுந்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சந்தியாவின் தாய் சரிதாவையும் அருள் குமார் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவர் சந்தியாவின் கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அருண் குமாரை கைது செய்தனர்.
சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.