செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:55 IST)

பாகிஸ்தான் டீ எப்படி இருந்துச்சு? மனைவியிடம் என்ன சொன்னார் அபிநந்தன்?

இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அடுத்தடுத்த நடந்த எல்லை தாண்டிய தாக்குதல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது. 
அதோடு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதக அறிவித்த பின்னரும், அவர் இந்தியா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் வரை பதற்றம் நிலவியது. 
 
இப்படியிருக்கையில், அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் இருந்த போது, அவருக்கு தேனீர் வழங்கப்பட்டது. அதனை பருகியபடி அவர் ராணுவ வீரர்களில் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. 
 
பாகிஸ்தானில் வழங்கப்பட்ட டீ எப்படி இருந்தது என அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு அவர் டீ நன்றாக இருந்தது என கூறியிருக்கிறார். நான் போடும் டீயை விட நன்றாக இருந்ததா என அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆம் நீ போடும் டீயை விட நன்றாக இருந்தது என கூறியிருக்கிறார்.