1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (10:03 IST)

2வது கணவணை தீர்த்துக்கட்டிய மனைவி: அம்பலமான உண்மைகள்!!!

கடலூரில் 2வது கணவனை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் பரிமளா. இவரது 2வது கணவர் அய்யாபிள்ளை. இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அய்யாப்பிள்ளை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
 
அப்படி கடந்த 13ந் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஆத்திரத்தில் பரிமளா அய்யாபிள்ளையை கட்டையால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அய்யாபிள்ளை உயிரிழந்தார். இதனால் பதறிப்போன பரிமளா, கணவனின் உடலை செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு கணவன் காணவில்லை என ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார்.
 
இதுகுறித்து அய்யாபிள்ளையின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் பரிமளாவிடம் விசாரனை நடத்தினர். விசாரணையில் பரிமளா முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, அவர்கள் கிடுக்குப்ப்டி விசாரணை நடத்தினர். இதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.
 
இதையடுத்து போலீஸார் செப்டிக் டேங்கில் இருந்த அய்யாபிள்ளையின் உடலை மீட்டனர். மேலும் கொலை செய்து நாடகமாடிய பரிமளாவை போலீஸார் கைது செய்தனர்.