1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (12:50 IST)

வித்தை காட்டிய பயிற்சியாளர் - கடித்து குதறிய முதலை

தாய்லாந்தில் முதலை ஒன்று பயிற்சியாளரின் கையை கடித்து குதறிய வீடியோ வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் காவ் யாய் என்ற தேதிய பூங்கா உள்ளது. மிகவும் பிரபலமான இந்த பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள். உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாட்டு பார்வையாளர்களும் இந்த பூங்காவிற்கு வருவார்கள்.
 
முதலை பயிற்சியாளர் ஒருவர், முதலையின் வாயில் கையை விட்டு வித்தை காண்பித்துள்ளார். அப்போது திடீரென அந்த முதலை பயிற்சியாளரின் கையை கடித்து குதறியது. உடனடியாக முதலையின் பிடியிலிருந்து பயிற்சியாளர் தப்பித்துச் சென்றார்.
 
இந்த வீடியோவானது தற்பொழுது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.