செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (09:09 IST)

தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு

சமீபத்தில் தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாய்லாந்து மீட்புப்படையினர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒன்பது நாட்களுக்கு பின்னர் சிறுவர்கள் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட செயல் ஒரு உலக அதிசயமாக பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தகுந்த மருத்துவ சிகிச்சைக்குக் பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிட்டத்தட்ட மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட இந்த சிறுவர்கள் தற்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். தங்களுக்கு மீண்டும் வாழ்வளித்த கடவுள் புத்தருக்கு நன்றி சொல்லும் வகையில் தற்காலிக துறவை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். 
 
இதற்காக நேற்று தாய்லாந்தில் உள்ள புத்தர் கோவிலில் கூடிய அந்த சிறுவர்கள் மொட்டையடித்து, துறவிகளுக்கான ஆடையை அணிந்து கொண்டனர். இருப்பினும் சில நாட்கள் மட்டுமே துறவறம் மேற்கொள்ளவிருப்பதாக அவர்கள் கூறியுள்ளது ஒரு ஆறுதலான செய்தி.