செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (16:36 IST)

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவால் மக்கள் அனைவரும் அவரை பாராட்டியும் வருகின்றனர். 
 
மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். ரூடே கடந்த ஆண்டு நெதர்லாந்து மன்னரை சந்திக்க சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 
 
இதனிடையே இவர் பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் இருந்த காபி கப் கீழே விழுந்து உடைந்தது.
 
உடனே, அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து மாபை அவரே வாங்கி சுத்தம் செய்கிறார். இதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 
 
இதோ அந்த வீடியோ...