வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (21:29 IST)

9 வயது சிறுவனுக்கு Youtub- ல் ரூ.220 கோடி வருமானம்!

தொழில்நுட்பம் ஆளும் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் எதாவது தெரிந்துகொள்ள வேறு யாரையும் எதுவும் கேட்கத் தேவையில்லை; சமையல் முதற்கொண்டு, கம்யூட்டர் வரை அனைத்து விஷயங்களையும்  யூடியுப்பில் பார்த்துக்கொள்ளமுடியும்.

அதில் சேனல் தொடங்கி பலரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.  யூடியுப் சேனல் தொடங்க வயது வித்தியாசம் இல்லை என்பதால் சிறுவன் ரியான் காஜி சுமார் 200 கோடி வரை சம்பாதித்துள்ளார்.

9 வயதுள்ள ரியானின் யூடியுப் சேனலுக்கு 27 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவர் ஜூன் 2020 ஆண்டில் யூடியுப் தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் நபராக உருவெடுத்துள்ளார். இவரது வருவாய்,  $29.5 மில்லியன் ஆகும்.இதிய மதிப்பில் சொல்வதென்றால் ரூ.220 கோடி ஆகும்.

ரியான் தனது யூடியுப் சேனலில் அமேசான் மற்றும் வால்மார்டின் பொம்மைகளை எடுத்து அதை ரிவியூ செய்வது ஆகும். இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.