செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (20:51 IST)

ஆப்பிள் நிறுவனத்தின் சூப்பர் பேட்டரி கார்... உலகமே எதிர்பார்ப்பு !

உலகம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் மனிதனின் கற்பனைக்கு எட்டியதையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியாக்கியுள்ளது.

அந்தவகையில், காரில் ஏறி உட்கார்ந்தலும் நாம் குரல் மூலம் ஸ்டார் செய்யச் சொன்னதும் தானே ஸ்டார்ட் ஆகக்கூடிய எலான் மஸ்கின் டெஸ்லா,  கியா போன்ற கார்கள் விற்பனையில் சாதனைப் படைப்பதுடன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபகாலமாகவே பெட்ரோல்,டீசல் வாகனங்களுக்கு மாற்றாக  பேட்டரியினால் இயங்கும் கார்கள் அதிகளவ் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் லேப்டாப். செல்போன்,போன்ற தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், வரும் 2024 ஆம் ஆண்டில் அதிநவீன பேட்டரி தொழில்நுட்பத்துடன் தயாராகும் முதல் மின்சார கார் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.