புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:44 IST)

சினிமாவில் விஜய் சேதுபதியின் 10 ஆண்டுகள்… common Dp நாளை வெளியீடு

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 10 ஆண்டுகள் ஆவதையொட்டி அவரது ரசிகர்கள் Common DP உருவாக்கியுள்ளனர். இதை நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யவுள்ளார் நடிகை ரெஜினா.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்குப் பருவக்காற்று, புதுப்பேட்டை,  விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர்களின் குபேரனாகவும் கருதப்படுகிறார். எனவே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பது விஜய் சேதுபதியின் நடிப்பில் சாத்தியம் என்பதால் அவருக்கு படங்கள் குவிந்து வருகிறது.

ஹீரோ மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக செக்கச் சிவந்த வானம், பேட்ட போன்ற படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய்சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், லாபம் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 10 ஆண்டுகள் ஆவதையொட்டி அவரது ரசிகர்கள் Common DP உருவாக்கியுள்ளனர். இதை நாளை மாலை 6 மணிக்கு நடிகை ரெஜினா, இயக்குநர் சீனுராமசாமி உள்ளிட்டோர் ரிலீஸ் செய்யவுள்ளனர்.