திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (13:17 IST)

விமானம் விபத்துக்குள்ளான வீடியோ? – தாக்கப்பட்டதா விமானம்!?

உக்ரைன் விமானம் ஈராக்கில் விபத்துக்குள்ளான நிலையில் விமானம் பூமியில் விழுந்து வெடிக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்க ட்ரோன் படைகள் தாக்குதல் நடத்தியதால் சுலைமானி என்ற ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். இதனை அடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஈரானில் உக்ரைன் நாட்டின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த விமானத்தில் சென்ற 180 பயணிகளின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை

ஈரான் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ஈரான் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் விமானம் விழுந்ததை படம் பிடித்ததாக ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எரியும் தீப்பந்து பூமியில் மோதி வெடிப்பது போன்று உள்ள அந்த வீடியோவில் உள்ளது உக்ரைன் விமானம்தான் என கூறப்படுகிறது. விமானம் எரிந்து கொண்டே விழுவது போல தெரிவதால் ஈரான் ராக்கெட்டுகளால் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாமோ என பேசிக் கொள்ளப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.