ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 29 மார்ச் 2024 (14:21 IST)

மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பொன்னுசாமி வயது(48) என்பவர்  கடந்த 2021- ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக  அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இவ் வழக்கின் விசாரணை  முடிவு பெற்று குற்றவாளி பொன்னுசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற் கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் (இ.கா.ப) பாராட்டினார்.