ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:07 IST)

சர்க்கரை அளவு 320ஆக உயர்வு.. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டதா? சிறை நிர்வாகம் தகவல்..!

arvind kejriwal
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து அவருக்கு இன்சுலின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சர்க்கரை அளவு 320க்கும் அதிகமாக இருந்ததை எடுத்து இன்சுலின் வழங்க பரிந்துரை செய்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதாகவும் திகார் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இரண்டு யூனிட்டுக்கள் இன்சுலின் ஊசியின் மூலம் கெஜ்ரிவாலுக்கு செலுத்தப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran