இலங்கை குண்டுவெடிப்பு: ஒரே குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது

Last Modified ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (18:30 IST)
இலங்கையில் இன்று காலை முதல் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட 8 குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 8 வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தியது ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் 450 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் அனனவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :