திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (15:40 IST)

சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு!!!

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து வதந்திகள் பரவாமல் இருக்க சமூகவலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.

 
 
ஈஸ்டர் தினமான இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல் உள்ளிட்ட 7 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் மக்கள் 150க் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது மீண்டும் இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.  
 
இந்நிலையில் குண்டுவெடிப்பு குறித்து பரவும் வதந்திகளை தடுக்க இலங்கை அரசு அந்நாட்டில் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களை முடக்கியுள்ளது.