67.37 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.37 கோடியாக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் 673,709,318 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,749,490 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 645,778,442 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,181,386 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,907,433 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,129,618 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 100,981,555 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,682,104 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,737 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,149,346 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,492,839 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,008 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,206,281 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva