1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (07:24 IST)

உலக கொரோனா நிலவரம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,76,752 பேருக்கு பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6.41 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 64,188,950 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,486,609
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 44,437,980 
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,264,361 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,108,490 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 276,976 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,333,018 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 1,76,752 பேருக்கு கொரோனா பாதிப்பு என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,499,710 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 138,159 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,931,798 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,388,526 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 173,862 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,656,498 என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் ஒரே நாளில் 52,248; ரஷ்யாவில் 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது