வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:43 IST)

அம்மன் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் குடியும் கூத்துமா? பொங்கியெழுந்த சமூகவலைதளம்!

மூக்குத்தி அம்மன் சக்ஸஸ் பார்ட்டியில் குடியும் கூத்துமாக இருக்கும் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் வெளியாகி சில நாட்களிலேயே இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான அனைத்துப் படங்களின் பார்வைகளையும் தாண்டி முதலிடத்தில் உள்ளதாம். இந்நிலையில் இப்போது ஹாட்ஸ்டார் முகநூல் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் படக்குழுவினர் ஈடுபட்டனர். அதில் பலரும் குடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டனர். இந்த படம் அம்மன் படம் என்பதால் படப்பிடிப்பின் போது அனைவரும் அசைவ உணவு கூட சாப்பிடவில்லை என்று ஆர் ஜே பாலாஜி பெருமை பீற்றிக்கொண்டார். அப்படிப்பட்ட படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் மட்டும் அனைவரும் குடிக்கலாமா என சமுகவலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.