1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:24 IST)

சிவக்குமாருக்கு கொரோனாவா? வெளியான புகைப்படம்!

நடிகர் சிவக்குமாருக்கு கொரோனா என செய்திகள் வெளியான நிலையில் தனது புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது புதிய செல்பி ஒன்றை சிவக்குமார் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆரோக்யமாக இருக்கும் சிவக்குமார் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுக்கும் விதமாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.