1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:32 IST)

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது
 
இந்த நிலையில் திடீரென தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குணம் ஆகி விட்டதாகவும் அவர் நேற்றே டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் கூறியிருந்தார். ஆனால் நேற்று விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆகவில்லை என தெரியவருகிறது
 
இந்த நிலையில் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது ’விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் தெரிவித்தார் இதனையடுத்து விஜயகாந்த் உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதை அறிந்து தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்