ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:35 IST)

கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா டாப்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலகில் சுமார் 213 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3,35,41,722  ஆக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் சூநிலையில் கொரோனா பரவலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 37,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை  73,61,205 ஆக உள்ளது.  
 
இதேபோல பிரேசிலில் 16,018 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,48,327 ஆக உள்ளது. 
 
ஆனால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகமானதாக கருதப்படுஇறது. 
 
இதன் உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும், உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.