1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (14:30 IST)

உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி எந்த மைதானத்தில்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசியல் காரணங்களால் இரு நாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் இந்த அணிகள் மோதும் ஐசிசி போட்டிகளை ஒரு வெறியோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் இருநாட்டு தொடர் நடக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷாகித் அப்ரிடி இப்போது இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி இந்தியா வரவுள்ள நிலையில் அந்த அணி விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய மைதானம் அகமதாபாத் மைதானம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.