திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

பதீரனா டெஸ்ட் & ஒருநாள் போட்டிகளில் விளையாடக் கூடாது… தோனி அட்வைஸ்!

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான El Classico போட்டியில் மும்பை அணியை சொந்த மண்ணில் வைத்து வென்றது சிஎஸ்கே. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதை சென்னை அணி சாதித்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணி இளம் பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவின் விளையாட்டு பலரை கவர்ந்துள்ளது.

மலிக்கா போல சைடு வாக்கில் பந்து வீசும் அவரது ஸ்டைலுடன், விக்கெட்டுகள் வீழ்ந்ததும் நெஞ்சில் கை வைத்து, வானத்தை நோக்கி வேண்டுவது போன்ற அவரது உடல் மொழியும் பலரை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இளம் வீரரான பதீரனா பற்றி பேசியுள்ள தோனி அவர் டி 20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த  வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்ச்சில் “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியுள்ளார்.