செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:07 IST)

தினமும் 2 கிலோ இறைச்சி சாப்பிடும் பாடி பில்டர்.. 36 வயதில் மாரடைப்பில் மரணம்..!

தினமும் இரண்டு கிலோ இறைச்சி சாப்பிடும் பாடி பில்டர் 36 வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலாரஸ் நாட்டைச் சார்ந்த இலியா என்ற 36 வயது நபர் பாடி பில்டராக இருந்து வந்த நிலையில் அவர்  உடற்பயிற்சி மூலம் அசுரத்தனமான உடல்வாகை பெற்று இருந்தார்.  இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது மனைவி அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.

கடந்த சில நாட்களாக அவர் கோமாவில் இருந்த நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி தனது சமூக வலைதளத்தில் ’எனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் மார்பில் கைவைத்து நன்றாக அழுத்தினேன். ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவி செய்தேன்.  அவர் முழு உடல் நல பேர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தேன். அவரது இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியவுடன் அவர் பிழைத்து விடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவருடைய மூளை செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று எனது கணவர் இலியா காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, எனக்கு உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி, நான் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 ஆறடி ஒரு இன்ச் உயரம் கொண்ட இலியா 154 கிலோ எடையுடன் இருந்தார். மார்பளவு 61 இன்ச் கொண்டவராகவும் இருந்தார். தினமும் இரண்டு கிலோ இறைச்சி மற்றும் 16500 கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டாராம்.

Edited by Mahendran