செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (10:48 IST)

மகனுக்கு பிறந்தநாள் கூறிய சில நிமிடங்களில் தாயார் மரணம்.. நடிகர் கிங்காங் வீட்டில் சோகம்..!

நடிகர் கிங்காங் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு அவரது தாயார் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால் சில நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு வந்து அவர் காலமானது கிங்காங் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் கிங்காங் என்பதும் இவர் 17 வயது முதல் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் இப்போதும் கூட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி பல நகரங்களில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு 12 மணிக்கு அவரது தாயார் கிங்காங்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

தனது பிறந்தநாள் அன்றே தனது தாயார் இறந்ததும் அதுவும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சில நிமிடங்களில் இறந்ததால் கிங்காங் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Edited by Siva