1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (11:48 IST)

பேசிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு! நேரலையில் உயிரிழந்த சித்தராமையா ஆதரவாளர்! - அதிர்ச்சி வீடியோ!

Karnataka

பெங்களூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே சித்தராமையா ஆதரவாளர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கர்நாடக மாநில முதலமைச்சரான சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுனர் உத்தரவிட்டதை கண்டித்து பல்வேறு இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடந்து வருகிறது. அவ்வாறாக பெங்களூர் விதானசவுதா அருகே கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையா ஆதரவாளருமான சி.கே.ரவிச்சந்திரன் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

 

அப்போது பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K