ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (10:04 IST)

விளையாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீரர்!.. ரசிகர்கள் சோகம்..!

உருகுவே நாட்டின் கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உருகுவே கிளப் நேஷனல் என்ற அணிக்காக 27 வயது வீரர் ஜுவான் என்பவர் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் மயங்கி விழுந்த நிலையில் சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவரை மருத்துவ குழுவினர்களிடம் அழைத்துச் செல்ல உதவி செய்தனர். மருத்துவ குழு அவரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தபோதிலும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ஜுவான் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஜுவானுக்கு ஏற்கனவே முறையற்ற இதய துடிப்பு இருந்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் கால்பந்து விளையாடிய போது மயக்கம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

மறைந்த ஜுவானுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதும் இதில் ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran