திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (07:29 IST)

300 ஆண்டுகள் பழமையான புத்தகங்களை டிஜிட்டலாக மாற்றுகிறது கூகுள்

உலகின் நம்பர் ஒன் தேடுதள நிறுவனமான கூகுள்,  பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான நூல்களை, டிஜிட்டல் வடிவிற்கு மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. கூகுள் புக்ஸ்-பிரிட்டிஷ் நூலகம் இடையே செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தால் பழமையான நூல்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கிபி 1700 முதல் 1870-ம் ஆண்டுகளில் வெளிவந்த சுமார் 4 கோடி பக்கங்கள் கொண்ட புத்தகங்களை பிரிட்டிஷ் நூலகம் பாதுகாத்து வைத்துள்ளது. இந்த புத்தகங்களின் பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த நூல்களை படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்த புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்ற கூகுள் முடிவு செய்துள்ளது

இந்த பணிகள் முடிந்த பின்னர் பொதுமக்கள் இந்த பழமையான புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளதாகவும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் முழுமையான டிஜிட்டல் வடிவத்தை இந்த புத்தகங்கள் பெற்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.