கோலியை வலைவீசி தேடிய பாகிஸ்தானியர்: காட்டிக்கொடுத்த கூகுள்!!
கூகுள் டிரெண்ட்ஸில் முதல் இடம் பிடித்துள்ளார் கோலி, அதுவும் இந்தியாவில் அல்ல பாகிஸ்தானில். ஆம், பாகிஸ்தானில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஷாஹித் அப்ரிடி அணியில் இருந்த போது பல முறை அவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார். ஆனால், தற்போது கோலி அதிக அளவில் தேடப்பட்டுள்ளார்.
கோலியை போன்று பாகிஸ்தான் நாட்டில் அஹமது ஷேஷாத் என்று கிரிக்கெட் வீரர் இருக்கிறார். இவரது பேட்டிங் ஸ்டைலும், கோலி பேட்டிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகயளவில் தேடியதை அறிந்த இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.