திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:05 IST)

அமேசானில் ரஜினியின் '2.0': கோடிக்கணக்கில் கைமாறிய பணம்

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ஒரு திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும். ரஜினி, கமல் காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விற்பனை ஆனது. பின்னர் சாட்டிலைட் உரிமை என்று தனியாக ஒரு பெரிய தொகை தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஒருசில வருடங்களாக யூடியூப் உரிமை மற்றும் மொபைல் ஒளிபரப்பு உரிமை அடங்கிய டிஜிட்டல் உரிமை என்று தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
டிஜிட்டல் உரிமையை பொருத்தவரை அமேசான், நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' படத்தின் டிஜிட்டல் உரிமையை பலகோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது
 
ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது டிஜிட்டல் உரிமையையும் சேர்த்து ரூ.200 கோடி வியாபாரத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்ற நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் பட்ஜெட்டை விட பலமடங்கு வியாபாரம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.