கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்த பாகுபலி 2!!

Last Updated: வியாழன், 14 டிசம்பர் 2017 (15:18 IST)
ஆண்டுதோறும் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வாசகங்கள் குறித்த செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான தேடல் வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகங்களின் பட்டியலில் பாகுபலி 2 முதலிடத்தில் உள்ளது. ராஜமெளலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.


இதனை தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), லைவ் கிரிக்கெட் ஸ்கோர் ஆகிய வாசகங்கள் 2 வது மற்றும் 3 வது இடத்தை பிடித்துள்ளன.
பொழுதுபோக்காளர்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து ஆர்ஷி கான், சப்னா சௌத்ரி, வித்யா வாக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸ் பட்டியலில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேச தேர்தல், ஜிஎஸ்டி, பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதை தவிர, ஆதார் எண் - பான் கார்டு இணைப்பு, ஜியோ போன் வாங்கும் முறை ஆகியவையும் அதிகம் கூகுலில் தேடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :