கொரோனா வைரஸ் வதந்தியை நம்பி 300 பேர் பலியான பரிதாபம்
கொரோனா வைரஸ் வதந்தியை நம்பி 300 பேர் பலியான பரிதாபம்
கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இந்த மரணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று உலகெங்கும் இருக்கும் அரசுகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இரவுபகலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தியை உண்மை என நம்பி ஈரான் நாட்டில் 300 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் நாட்டின் ஊடகம் ஒன்றில் ஆல்கஹால் குடித்தால் கொரோனா தாக்காது என்ற ஒரு செய்தியை படித்த நூற்றுக்கணக்கானோர் மெத்தனால் கலந்த ஆல்கஹாலை குடித்துள்ளனர். இதனையடுத்து அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆல்கஹால் குடித்த 300 பேர் மரணம் அடைந்துவிட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஈரான் நாட்டு அரசு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இதுபோல் பொய்யான வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.