வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (07:10 IST)

உலக கொரோனா தொற்று: 3.67 கோடியாக அதிகரிப்பு:

உலக அளவில் கொரோனா தொற்றால்  3,67,34,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,66,341 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,76,29,679 பேர் மீண்டுள்ளனர் என்றும், உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 80,38,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் 7,833,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவுக்கு 217,738 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், இதுவரை கொரோனாவில் இருந்து 5,017,282 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,03,806 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 106,521 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து 5,903,207 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5,029,539 ஆக உயர்வு என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் 149,034 பேர் பலியாகி உள்ளனர் என்பதும், 4,414,564 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  1,260,112 ஆக உயர்வு என்பதும், 
மெக்ஸிகோவில் இதுவரை கொரோனா தொற்றால் 82,726 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 42,592    பேர் மரணம் அடைந்துள்ளனர்
 
உலகிலேயே  அதிகபட்சமாக  அமெரிக்ககாவில்  217,661 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்