திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:57 IST)

இலக்கியத்திற்கான நோபல் பரிசு – 26 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாதனை!

நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 1993க்கு பிறகு ஒரு பெண் கவிஞருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதன்முறை.

அமெரிக்க கவிஞரான 77 வயதாகும் லூயிஸ் க்ளுக் கவிதைகள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முன்னதாக அமெரிக்காவில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான புலிட்சர் விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.