புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (15:40 IST)

13 வயதில் ஒரு வங்கியை நடத்தி வரும் பெரு நாட்டு மாணவன்

2000 பேர் வாடிக்கையாளர்களாக உள்ள ஒரு வங்கியை 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறான் ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா என்ற மாணவன்.

ஜோஸுக்கு 7 வயதாக இருக்கும் போது மாணவர்கள் தங்கள் தேவைகளுக்கு பெற்றோரைச் சார்ந்திருக்காமல் தாமே தமது செலவினங்களை கவனித்துக் கொள்வதற்கு ஒரு திட்டத்தை யோசித்தான். அத்திட்டத்தின் படி பள்ளியில் ஒரு வங்கியைத் தொடங்கி, அதில் மாணவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். உறுப்பினராகும் மாணவர்கள் தங்கள் வீட்டில் பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற மறுசுழற்சி செய்ய்க்கூடிய பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அந்த பொருட்களை விற்று அந்த தொகையை அந்தந்த மாணவர்கள் பெயரில் இருப்பு வைக்கப்படும்.

மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் போது அந்த தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த யோசனையை முதலில் தனது பள்ளியில் சொன்னபோது பலரும் ஜோஸைப் பார்த்து சிரித்துள்ளனர். ஆனாலும் மனம் தளாரத ஜோஸ் பள்ளி முதலவரிடம் பேசி சம்மதம் வாங்கி இருக்கிறான்.

முதலில் வங்கியில் இணைவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடக்க ஆரம்பித்துள்ளது. தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு இந்த வங்கியின் உறுப்பினர் எண்ணிக்கை 2000 பேராக உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மட்டும் இந்த வங்கியின் மூலம் 1 டன் மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை பெரு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த இளம் சாதனையாளனுக்கு பெரு நாட்டிலும் மற்ற வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.