திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:14 IST)

கிடுகிடுக்க செய்யும் கொரோனா பலிகள்: சீனாவை முந்தி செல்லும் நாடுகள்!

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா எண்ணிக்கையால் பல நாடுகள் சீனாவின் இறப்பு எண்ணிக்கையை காட்டிலும் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இத்தாலியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவற்றை தொடர்ந்து அதிகமான உயிர்பலியை சந்தித்த நாடுகளாக பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.

கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.