கேரளா, டெல்லி ஆகிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோயினால் இதுவரை ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கல் பலியாகியுள்ளனர். 5 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 950 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,000 –ஐ தாண்டிவிட்டது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு இற்ந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் இன்று மேலும் 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 91 பேர் கரோனாவில் பாதிப்பு என தகவல் வெளியாகிறது. எனவே அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.மேலும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 259 பேருக்கு பாசிட்டிவ் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவிததுள்ளார்.