திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 ஏப்ரல் 2020 (13:53 IST)

கொரோனா : சமூக பரவலை தடுக்க மத்திய அரசு அறிவுரை!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக பரவலை தடுக்க இது உதவும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.