1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 5175 COVID19 positive cases reported in Tamil Nadu today

தமிழகத்தில் 3வது நாளாக 100ஐ தாண்டிய கொரோனா பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகம்
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5175 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 273,460 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5175 பேர்களில் 1,044 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,004
ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 112 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6,031 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 61,166 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட் விலையில் அறிமுகமானது லாவா இசட்66!!