செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (16:19 IST)

இரவில் மட்டுமே தெரியும் தொடர் – ஸ்பீல்பெர்க் மாயாஜாலம் !

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் புதிதாக ஒரு இணையத் தொடரை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படைப்புகளான ஜாஸ், ஜுராஸிக் பார்க் ஆகியப் படங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவர் இப்போது புதிய பிளாட்பார்மான ஸ்டீரிமிங் தளங்களில் இறங்க இருக்கிறார்.

கியூபி (Quibi) எனும் புதிய ஸ்டிரீமிங் சேவைக்குதான் ஸ்பீல்பெர்க் புதிய தொடரை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்பீல்பெர்க் உருவாக்க இருக்கும் இந்த திகில் தொடரில் வியக்க வைக்கும் விதமாக இந்தத் தொடரை ரசிகர்கள் இரவில் மட்டுமேக் காணமுடியுமாம். ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் உள்ள கடிகார வசதி மூலம் இரவு நேரத்தில் மட்டுமே இந்தத் தொடர் ஸ்டீரீமிங் செய்யப்படும். காலை ஆனதும் தளத்தில் இருந்து எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீல்பெர்க்கின் இந்த அறிவிப்பால் ஹாலிவுட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.