1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sivakarthikeyan join with sivakumar murugesan again

தாய் கிழவி பட இயக்குனருடன் மீண்டு ஒரு படம்!. எஸ்.கே கொடுத்த அப்டேட்!...

sivakarthikeyan
ராதிகாவை வைத்து தாய் கிழவி என்கிற திரைப்படத்தை இயக்கியிருப்பவர் சிவக்குமார் முருகேசன். இது இவரின் முதல் திரைப்படம். இந்த படத்தில் வயது முதிர்ந்த கிழவியாக ராதிகா அசத்தலாக நடத்திருப்பதாக திரையுலகம் அவரை பாராட்டி வருகிறது. இந்த படத்திற்காக பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் ராதிகா. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் ராதிகாவின் நடிப்பையும், இந்த படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயனையும், படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசனையும் பாராட்டி பேசியிருந்தார்..

ஒருபக்கம் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் சேயோன் திரைப்படத்தையும் சிவக்குமார் முருகேசன்தான் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாய் கிழவி பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் ‘சேயோன் படத்திற்கு பின் மீண்டும் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த அறிவிப்பு தாய் கிழவி பட வியாபாரத்திற்காகவோ, வசூலுக்காகவோ இல்லை. சிவக்குமார் முருகேசன் மீது நான் வைத்திருக்கும் மரியாதை இது’ எனக்கூறியிருக்கிறார். தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
மீண்டும் ஒளிபரப்பாகிறது 'பாக்கியலட்சுமி' சீரியல்... தினமும் ஒரு மணி நேரமா?